இலங்கை
கதிரவெளி பால்சேனை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

கல்குடா வலய கதிரவெளி ககு/பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்க்கும் அதி கஸ்ர 17 மாணவர்களுக்கு ஒரு மாணவனுக்கு 5000/=பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் பிரதி அதிபர் திரு. நா. தயாகரன் தலைமையில் (28) நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
மேலும் இன் நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பினராகிய லோ. கஜரூபன் மற்றும் சி.காந்தன் ஆகியோரினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி வைக்கப்பட்டது.