ஆலையடிவேம்பு
தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி தொகைகள் வழங்கிவைப்பு….

தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியில் இன்றைய தினம் (17/10/2023) தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வு ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் K.கவிதா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வு தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு முதற்கட்டமாக பதினைந்து இலட்சம் ரூபா பணமே நான்கு பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.