ஆலையடிவேம்பு
திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (03) அதிபர் திரு.M.சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் கோலாகலமாக மாணவர்கள் மகிழ்வடையும் வண்ணம் இடம்பெற்றது.
”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் பங்கு பற்றிய சிறு ஊர்வலம் ஒன்றும் காலை வேளையில் ஏற்பாடு செய்து நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலை கலாசார அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான மதிய போசனம் என்பனவும் வழங்கப்பட்டிருந்தது.