சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 30.08.2023 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திற்கான கவனயீர்ப்பு பேரணி ஒன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் சங்கத்தினரால் மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மாவட்ட பொதுமக்கள் அம்பாரை மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி, சங்க நிருவாகிகள் உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத் தலைவி செபஸ்ரியான்தேவி மற்றும் சங்க நிருவாகிகள் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத் தலைவி நமச்சிவாயம் இளங்கோதை மற்றும் சங்க நிருவாகிகள் உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தம் ஜெனித்தா மற்றும் சங்க நிருவாகிகள் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் சங்க நிருவாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தினுடைய உறவுகள் கூட்டாக இணைந்து மிகவும் சிறப்பாக அதிக அளவிலான பொதுமக்கள் பங்கேற்போடு இந்த பேரணி மன்னார் சத்தொச மனித புதைகுழியில் இருந்து ஆரம்பமாகி மன்னார் நகர சபை விளையாட்டு மைதான திடலை நோக்கி மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட தாய்மார் சங்கங்களின் நிருவாகிகள் தலைவிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மதகுருமார் ஊடகவியலாளர்களின் பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்முள் என பலரது பங்கேற்ப்புடன் தாய்மாரின் கோஷங்களோடு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக் கோரியதாகவும் அரசியல் கைதிகளுடைய விடுதலை பெளத்த மயமாக்கல் தொல்லியல் வன இலாகா போன்றோரினதும் இராணுவம் கடற்படை மற்றும் படையினரின் தமிழர் தேச அபகரிப்புகள் குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை போன்ற தமிழர் தேச பூர்வீகங்கள் மீதான அத்துமீறல் இராணுவத்தினுடைய அடாவடிகள் பாதுகாப்பு தரப்புகள் மற்றும் புலநாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கோஷங்களோடும் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற கோஷங்களோடும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல அரசியல் பிரமுகர்களும் இந்த பேரணியிலேயே கலந்துகொண்டு இந்த மக்களுக்கான தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கி இருந்தார்கள்.
சுமார் 1500 முதல் 1800 பேர் வரையிலான பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதோடு பேரணியின் நிறைவிலே மைதானத்தின் மத்தியிலே ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் நிகழ்த்தப்பட்டது இவ் ஊடகவியலாளர் சந்திப்பிலே மன்னார் மாவட்ட தலைவி மற்றும் ஏனைய மாவட்டத் தலைவிகளும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டதோடு இந்த போராட்டம் எமது அடுத்த தலைமுறையிடமும் சென்றிருக்கின்றது என்பதை காட்டக் கூடிய வகையில் மன்னார் மாவட்டத் தலைவியின் பேரனால் இன்றைய நாளுக்கான அறிக்கையும் வாசிக்கப்பட்டதோடு மதகுருக்களுடைய கருத்துக்களும் பகிரப்பட்டு கலந்து கொண்ட மாவட்ட தலைவிகள் அனைவராலும் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சேர்ப்பதற்காக மதகுருக்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டதோடு கலந்து கொண்ட பொதுமக்களிலும் சிலர் தங்களுடைய ஆதங்கங்களையும் கருத்துக்களையும் வலிகளையும் பகிர்ந்திருதனர்.