ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சட்ட வல்லுனர்களுக்கான ஒன்றியத்தினால் நடாத்தப்படும் 12ஆம் தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான அரசியல் பாடவிதான கருத்தரங்கு நாளை….

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சட்ட வல்லுனர்களுக்கான ஒன்றியத்தினால் நடாத்தப்பட இருக்கும் 12ஆம் தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான அரசியல் பாடவிதான கருத்தரங்கு நாளை (26) சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கருத்தரங்கில் 12ஆம் தர அரசியல் பிரிவு மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்கள் தங்கள் பாடசாலை சீருடையில் வருகை தர வேண்டும் எனவும் அறியத்தருகிறார்கள்.