இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச வீதி ஓரங்களியில் மரக்கன்றுகள் நடுகை….

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று (18) காலை 9.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச, பனங்காடு சாகாமம் பிரதான வீதி ஓரங்களியில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் T.நவநீதராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான T.தஜீவரன் அவர்களும், சிறப்பு அதிதியாக பொத்துவில் தொகுதி அமைப்பாளர் பிரபாகரன் அவர்களும், ஆலையடிவேம்பு பிரதேச குழு தலைவி காந்திமதி, செயலாளர் டானியன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகண்டிருந்தார்.