அக்கரைப்பற்று செம்போடியார் வீதியில் புதிய எயாட்டல் தொலைத்தொடர்பு கோபுரம்: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்த சுவாமி விபுலானந்தா சிரேஸ்ட பிரசைகள் சங்கத்தினர்….

ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று செம்போடியார் வீதியில் எயாட்டல் டவர் (தொலைத்தொடர்பு கோபுரம்) புதிதாக அமைப்பதற்காக நேற்றய தினம் (08) அதிகமான வாகனங்களும் பணியாளர்களும் வருகைதந்திருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தினை அமைப்பதால் சூழவுள்ள மக்களுக்கு நோய்களும் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சமடைந்து மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்கள்.
மேலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதனை தடுத்து நிறுத்துவதற்கு சுவாமி விபுலானந்தா சிரேஸ்ட பிரசைகள் சங்கத்தினர் பிரதேசத்தை சேர்ந்த அமைப்பென்ற அடிப்படையில் நேற்றய தினம் முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
குறித்த முயற்ச்சி தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதனை தடுத்து நிறுத்தும் தற்காலிகமான ஒரு செயற்பாடாகவே அமைந்திருக்கிறது.
தொலைத்தொடர்பு கோபுரம் எங்கள் பிரதேசத்திற்கு தேவை இல்லை என்ற பிரதேச பொது மக்களின் நிலைப்பாட்டினையும் மனநிலையினையும் உணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றார்கள் பிரதேச பொது மக்கள்.