ஆலையடிவேம்புஇலங்கை
கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக பியசேன கிருத்திகன் நியமனம்….

ஆலையடிவேம்பு பிரதேச மண்ணை சேர்ந்த பியசேன கிருத்திகன் அவர்கள் இன்றைய தினம் (04) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாண் அவர்களிடம் இருந்து கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த நியமனத்தில் மூலமாக கிழக்குமாகாணத்தில் வீடற்றவர்களுக்கு வீடமைப்பு திட்டங்கள் கொண்டு வருவதற்குரிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு பணிப்பாளர் சபை மூலமாக பல செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய சர்ந்தப்பங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமனத்தை பெற்றுக்கொண்ட பியசேன கிருத்திகன் அவர்களுக்கு பிரதேச மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.