இலங்கை
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்க பொதுக்கூட்டம் 2023…

அம்பாறை மாட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பொது கூட்டமானது இன்றைய தினம் (15/07/2023) அம்பாறை தெஹிகொல்ல விருந்தினர் விடுதியில் மாவட்ட ஊடகவியலாளர் சங்க தலைவர் வசந்த சந்திரபால தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மாவட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன். மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த குறும் செய்தி போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற சமன் மாணிக்கராய்ச்சி , ரவீந்திர மெதஹெதர, ஏ எல் எம் சலீம், வீ.சுகிர்தகுமார், சமன் திசாநாயக்க ஆகியோர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜே.கே.யதுர்சன்