ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் மாபெரும் அன்னதான நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் நேற்றய தினம் (11.06.2023) மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மாபெரும் குறித்த அன்னதானத்திற்கான பங்களிப்பை அகில இலங்கை இந்துமாமன்றம், வெளிநாட்டுவாழ் நல்லுள்ளம் படைத்த அன்பர்கள், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற உறுப்பினர்கள்மற்றும் சமையலுக்கு தேவையான ஒருதொகுதி விறகு மு.பா.உ.கவீந்திரன் கோடிஸ்வரன் அவர்களாலும் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த அன்னதானம் வழங்கும் செயற்பாடு உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் சிறந்த முறையில் கடந்த 20 வருடங்களாக இடம்பெற்று வருகின்றமையும் சிறப்பிற்குரியது என்பதுடன்.
இவ் அன்னதானம் வழங்கும் செயற்பாட்டினால் பாதயாத்திரை செல்லும் பக்த அடியார்கள் மிகப்பெரும் பயனடைவதுடன், அதிகமான பக்த அடியார்கள் அன்னதானத்தில் கலந்து கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.