சிவ தொண்டர் மற்றும் சேவற்கொடியோன் அமைப்புக்களுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் ஏற்பாட்டில் 250 லீட்டர் டீசல் வழங்கிவைப்பு….

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் இந்து அடியார்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துவருகின்ற சிவ தொண்டர் அமைப்பு மற்றும் சேவற்கொடியோன் அமைப்பு ஆகியவற்றிற்கு இன்றைய தினம் (10/06/2023) காலை 10.00 மணியளவில் திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் ஏற்பாட்டில் அவர்களின் தொண்டுகளுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
சிவ தொண்டர் அமைப்பு மற்றும் சேவற்கொடியோன் அமைப்பு ஆகியவற்றின்நீர் தாங்கிகள் மற்றும் உழவு இயந்திரங்களுக்கு தேவையான 250 லீட்டர் டீசல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்களின் வழிகாட்டலுடனும், நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இன் நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் தஜீவரன் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வில் குறித்த கட்சியின் தொகுதி அமைப்பாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்காந்த், நவநீதன், திருக்கோவில் பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் உதவியை பெற்றுக்கொண்ட தொண்டர் அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.