டெங்கு காய்ச்சலினால் 90 பேர் உயிரிழப்பு!!!

டெங்கு காய்ச்சலினால் இவ்வருடத்தின் முதல் பத்து மாதகாலத்தில் 90 பேர் உயிரிழந்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 72 ஆயிரத்து 305 பேர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி அருணஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15,220 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் மழை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மக்கள் சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தாமையும் டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு ஒரு காரணமாகும்.
டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் முப்படையினரையும் ஈடுபடுத்துவதற்கான செயற்றிட்டமொன்று தயா ரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பொது மக்களும் தமது சுற்றாடலை சுத்த மாக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுப் பது அவசியமாகும் எனவும் அவர் குறிப் பிட்டார்.