திருக்கோவில் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

அம்பாரை மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன இன்றைய தினம் (05/05/2023) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. D.V. சுதாசேகர் அதிபர் தலைமையில்
இடம்பெற்றது.
திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஸ்ர தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் கமு/திகோ/ஊறணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் (60) மாணவர்களுக்கும், பொத்துவில் கமு/திகோ/இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் (50) மாணவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் இரு பாடசாலையிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 110 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இன் நிகழ்விற்கு கமு/திகோ/இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு.க. சந்திரகாசன் மற்றும் ஆசிரியர் திரு.க. கருணாகரன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன், திரு. காந்தன், திரு.சி.துலக்சன்,திரு. மா.ஜெயநாதன், திரு.சதிஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் பாடசாலையின் மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.