ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பும்: கவனயீர்ப்பு செயற்பாடும்….

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனியார் ஊடகம் ஒன்று செய்தி ஒளிபரப்பு செய்ததாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்கள் குறித்த செயற்பாட்டை கண்டித்து இன்று (24) காலை அண்ணளவாக ஒரு மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு இருந்தார்கள்.
பணிப்பகிஷ்கரிப்பு நேரத்தில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றினையும் முன்னெடுத்திருந்தார்கள் மேலும் ஊடகங்களுக்கும் தங்கள் பணிப்பகிஷ்கரிப்புக்கான காரணங்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்கள்.