இலங்கை
ராஜித்தவிற்கு அமைச்சுப் பதவியினை வழங்குவதற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு?

ராஜித சேனாரத்னவிற்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தினைச் சேர்ந்த ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரோஹிதவுக்கு இன்றி ராஜிதவுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர் எனவும், இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.