மன்னார் மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மன்னார் மாவட்டத்தில் மடு வலயத்திற்கு உட்பட்ட பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை (08/04/2023) நேற்றய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
இணைந்த கரங்கள் அமைப்பின் பங்களிப்போடும் அனைவரின் ஆதரவோடும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பூமலர்ந்தான் பாடசாலையில் கல்வி கற்கும் (84) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் உறவுகளினால் மிகவும் வறுமைக் கோட்டிங்கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன நேற்று காலை 10.00 மணியளவில் மன்னார் பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலையின் அதிபர் திரு.மரிசால் விக்டர் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் S.மோகன நந்தினி,ஆசிரியர்களான திருமதி,A. M. ஜெயசீலன், திருமதி.K.R. சந்திரமோகன், திருமதி L.புஸ்பராணி மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர் திருமதி. மாணிக்கவள்ளி கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம் மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மற்றும் அதி கஸ்ரத்தில் உள்ள (84)மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இன் நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் இணைந்த கரங்கள் உறுப்பினர்களாகிய திரு.லோ.கஜரூபன், திரு.எஸ்.காந்தன், திரு.சி.துலக்சன்,திரு.மா. ஜெயனாதன்,திரு. தெ.சிருஸ்காந், பெ. விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.