இலங்கை
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தனியார் காணியில் கைக்குண்டு கண்டெடுப்பு!

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் உமிரி, சீ ஷோர் வீதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் அதன் உரிமையாளர்கள் இன்று (09) காணியை துப்பரவு செய்த போது, அங்கிருந்து கைக்குண்டு ஒன்று அவதானிக்கப்பட்டதனை அடுத்து உரிமையாளர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து, திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கோவில் பொலிஸார் தம்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து கைக்குண்டை செயலிழக்கச் செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.