இலங்கை

சகவாழ்வு சங்கத்தினரினால் திருக்கோவில் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிநெறி…

திருக்கோவில்-02 சகவாழ்வு சங்கத்தினரால் மோதல் முரண்பாடு நல்லிணக்கம் பற்றிய  பயிற்சி நெறியானது ACTED நிறுவனத்தின் அனுசரனையில் திருக்கோவில் சகவாழ்வு சங்கநிலையத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வானது திருக்கோவில்-2 சகவாழ்வு சங்க செயலாளர்  சி.தயாளினி அம்மனி அவர்களின் ஏற்பாட்டில் திருக்கோவில்-2 சகவாழ்வு சங்கத்தலைவி K.சுஜாத்தா அம்மனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் வளவாளராக திரு.சுதாவாசுதேவ அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இவ் நிகழ்வில் இளைஞர் யுவதிகளுக்கு முரண்பாடுமோதல் பற்றிய தெளிவுட்டல் அவர்களினால் வழங்கப்பட்டதுடன் பயிற்சிகளும் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

இன் நிகழ்வில் திருக்கோவில்-2  சகவாழ்வு செயலாளர் சி.தயாளினி, சங்க தலைவி K.சுஜாத்தா,சங்க பொருளாளர் K.கிஷ்ணவேனி மற்றும் உறுப்பினர்கள் , வளவாளர்கள் என பலரும் இவ் பயிர்ச்சி நெறியில் கலந்து கொண்டதுடன் சங்கத்தலைவி செயளாரினால் நன்றி உரையும் இடம்பெற்றது.

ஜே.கே.யதுர்ஷன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker