அக்கரைப்பற்று – பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான திருக்கொடியேற்றப் பெருவிழா- 2023 விஞ்ஞாபணம்.

இலங்கை நாட்டின் கிழக்கே எழில்கொஞ்சும் இயற்கை வனப்புமிக்க பனங்காடு என்னும் பதியில் ஸ்ரீ பாசுபதேசுவரர் என்னும் திருநாமத்தோடு இலிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருத்தலமாகும்.
இத்தலத்தின் வருடாந்த திருக்கொடியேற்றப் பெருவிழா நிகழும் சுபகிருது வருடம் பங்குனி மாதம் நாள் திங்கட்கிழமை (27.03.2023) பூர்வபக்க சப்தமித் திதியும் ரோகிணி நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய பகல் 9.14 முதல் 10.40 வரை உள்ள மணியளவில் வரும் சுபவேளையில் ஆரம்பமாகும்.
26.03.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகவழிபாடு, அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி போன்ற பூர்வாங்க கிரியைகள் நடைபெறும். தினமும் பகல் இரவுத் திருவிழாக்கள் ஒன்பது தினங்கள் நடைபெற்று 07.04.2023 வெள்ளிக்கிழமை வைரவர் பூசையுடன் இனிது நிறைவுறும். இவ்விழாக்கள் அனைத்திலும் யாவரும் கலந்து அருள்பெற்றுச்செல்லுமாறு அழைக்கின்றார்கள்.
உற்சவகால ஒழுங்குகள்
26.03.2023 – ஞாயிறு மாலைப் பூசையைத் தொடர்ந்து விநாயகர்வழிபாடு, அனுக்ஞை முதலிய பூர்வாங்கக் கிரியைகள் இடம்பெறும்.
27.03.2023 – கொடியேற்றம் (1ம் நாள் திருவிழா)
28.03.2023- 2ம் நாள் திருவிழா
29.03.2023 – திரிபுரதகனத் திருவிழா (3ம் நாள் திருவிழா)
30.03.2023 – தெப்பத் திருவிழா (4ம் நாள் திருவிழா)
31.03.2023 – 5ம் நாள் திருவிழா
01.04.2023 – பாசுபதாஸ்திரத் திருவிழா (6ம் நாள் திருவிழா)
02.04.2023 – மாம்பழத் திருவிழா (7ம் நாள் திருவிழா)
03.04.2023 – திருவேட்டைத் திருவிழா (8ம் நாள் திருவிழா)
04.04.2023 – சங்காபிஷேகம்(பகல்), நகர்வலம்(இரவு) – (9ம் நாள் திருவிழா)
05.03.2023 – தீர்த்தோற்சவம் (காலை), கொடியிறக்கம் (மாலை) , சண்டேசுவரர் உற்சவம்
06.04.2023 – பூங்காவனத் திருவிழா
07.04.2023 – வைரவர் பூசை