மகாசக்தி தலைமைக் காரியாலய வளாகத்தில் கலாசார மண்டபம் திறந்துவைப்பு….

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 5000 ற்கு மேற்பட்ட பெண்களைக் கொண்டு 30 வருடங்களாக இயங்கி வரும் வரைவுள்ள மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கமானது, இச்சமூக மக்களின் நலன் கருதி புத்தாக்க செயற்ப்பாடாக சங்கத்தின் கெளரவ தலைவி திருமதி.பி.மங்கையர்க்கரசி அம்மணி அவர்களின் தலைமையில் (09.03.2023) வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மகாசக்தி தலைமைக் காரியாலய வளாகத்தில் கலாசார மண்டபம் மிகவும் சிறப்பான முறையில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், கூட்டுறவு அபிவிருத்தி அலுவலகம் – கல்முனை திரு.K.V. தங்கவேல் ஐயா அவர்களும்,
விஷேட அதிதிகளாக ஜனாப் M.A.C.M. ஷபீக் (மக்கள் வங்கி, முகாமையாளர்), அவர்களும், உதவி முகாமையாளார் திரு.ச.ராஜகாந்தன் அவர்களும், நெதர்லாந்து மனித நேய சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்க இலங்கைக்கான இணைப்பாளர் திரு.Y. ஜெயமுருகன் அவர்களும்
மேலும் கூட்டுறவு தலைமைக்காரியாலயத்தில் இருந்து கலந்து கொண்ட, M.I.M. பரீட் தலைமைக்காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (அபிவிருத்திப் பிரிவு ) ஜனாப். M.C. ஜலால் டீன் தலைமைக்காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (எண்பார்வை) , கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜனாப். U .L M. பௌஸ், திரு. இ.பவப்பிரகாசன் அவர்களும் மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்திற்கு பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. K. காந்தரூபன் அவர்களும்,
ஆலையடிவேம்பு, பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு.நா. ஏரம்பமூர்த்தி அவர்களுடன் , மகாசக்தி சங்கத்தின் செயலாளருமான முகாமையாளருமான திரு. ச. திலகராஜன் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர்களான, திருமதி.வி. பிரகலாதேவி அவர்களும், திருமதி.ப.நவநிதா அவர்களும், திருமதி.சு.துஸ்யந்தி அவர்களும், திருமதி.தி. சுதர்சினி அவர்களும், செல்வி.வி. மோகனா அவர்களும் கெளரவ அதிதிகளாகவும், சங்க உழியர்கள், சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.