திருக்கோவில் பிரதேசத்தில் மகளிர்த்தினத்தை முன்னிட்டு இரு வீடுகள் பயணாளி குடும்பங்களுக்கு கையளிப்பு……

சர்வதேச மகளிர்தினத்தை ஒட்டி திருக்கோவில் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயன்பெறும் பெண் தலைமைத்துவம் பெறும் இருகுடும்பங்களுக்கு செளபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் 6 அரை லட்சம் ரூபாய் பெறுமதியான இருவீடுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு குடுபங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வானது மகளிர்தினமாக நேற்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் திருக்கோவில் சமுர்த்தி முகாமையாறர் திரு.பரமானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது .
மேலும் கனடா நாட்டில் உள்ள சர்வதேச மகளிர் அமைப்பின் நிதி பங்களிபின் ஊடாக அங்கு வசிக்கும் ரஜி பீட்டர்சன் என்பவரின் வழிகாட்டலில் கஞ்சிகுடியாறு கிராமிய நலன்புரி சங்கத்தினரால் கஞ்சிகுடியாறு கிராமத்தில் வசித்துவரும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 11 பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேன் படுத்துவதற்காக தலா பத்தாயிரம் (ரூபா 10000/=) வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜா மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் திட்ட உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம நிலதாரி மற்றும் பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜே.கே.யதுர்ஷன்