இலங்கை
அட்டாளச்சேனை ஆலங்குளம் ஆலயத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள்….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் அட்டாளச்சேனை ஆலங்குளம் ஆலயத்தில் 2023ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா நிகழ்வுகள் இன்றைய தினம் (27/01/2023) வெள்ளிக்கிழமை த.பிரதீபன் அவர்கள் மற்றும் அவர்களின் குழுவினர் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
அட்டாளச்சேனை ஆலங்குளம் ஆலயம் புராதன ஆலயமாக காணப்படுவதுடன் தமிழர்களின் பரம்பரித்தின் அடையாளமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.