ஆலையடிவேம்பு
ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சுவாமி விவேகானந்தரின் 161வது ஜனன தின நிகழ்வு….

சுவாமி விவேகானந்தரின் 161வது ஜனன தினமானது அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (12/01/2023) பாடசாலையின் பிரதி அதிபர் திரு.க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையின் நுழைவாயில் அமைந்திருக்கும் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை பிரதி அதிபர்களான க. ஜயந்தன் மற்றும் திரு. சி.மதியழகன் ஆகியோரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஜனன தின நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.க.கமலனாதன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பிரதி அதிபர் திரு.சி. மதியழகன், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.