ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் தை திருநாள் பண்டிகை பொருட்கொள்வனவில் மும்முரம்….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை எதிர் வருகின்ற 15ம் திகதி அதாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கின்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பண்டிகையை கொண்டாட அதிக பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளதுடன் பிரதேச பிரதான வீதிகளில் அதிகளவான தற்காலிக புது கடை தொகுதிகளும் தோன்றி இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.