சாகாம வீதி ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியின் சமிக்ஞை பதாதைகளின் (Sign board) நிலைகளும்: மாணவர்களின் பாதுகாப்பின் கேள்விக்குறியும் – தீர்வுக்கான நகர்வும்…

-ம.கிரிசாந்-
ஆலையடிவேம்பு பிரதேச,சாகாமம் பிரதான வீதி கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக காணப்படுகின்ற பாதசாரி கடவைக்கான சமிக்ஞை பதாதை (Sign board) மற்றும் அதனை அண்மித்ததாக காணப்படும் பகுதிகளிலும் (தீவுக்காலை பகுதியில்) நடப்பட்டுள்ள சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டு பதாதை என்பன வீதியால் செல்லும் சாரதிகளுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை காணமுடியா வண்ணம் வீதியில் இருந்து விலகி கிடப்பதாக காணப்படுகின்றது.
குறித்த சமிஞ்சை பதாதைகள் (Sign boards) இனந்தெரியாத ஒரு சில நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க கூடியதாக இருப்பதாக பிரதேச வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.
இவ்வாறாக இருக்கின்ற போதிலும் பாடசாலை ஒன்றின் முன்னால் காணப்படுகின்ற பிரதான வீதியின் பாதசாரி கடவை என்பதால் அதிக பயன்பாடு உடையதாகவும் சிறுவயது மாணவர்களின் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்டதாகவும் மற்றும் சாகாமம் பிரதான வீதி அக்கரைப்பற்று நகரில் இருந்து சின்னப்பனங்காடு, பனங்காடு, மஹாசக்தி கிராமம், புளியம்பத்தை, கவடாப்பிட்டி அலிக்கம்பை, புட்டம்மை, சிப்பித்திடல் மேலும் பொத்துவில் வரை செல்லக்கூடிய வீதி என்பதாலும்.
குறித்த பிரதேச மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற வீதியாக அமைவதால், மக்களின் மற்றும் பயணிகளின் பாதுகாப்புமிக்க பயணங்களுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக சமிக்ஞை பதாதைகள் காணப்படுவதுடன். மிக கட்டாயமாக சமிஞ்சை பலகைகள் நிறுவி இருப்பது முக்கியம் பெறுகின்றது.
இவ்வாறாக குறித்த நிலையினை பேசுபொருளாக மாத்திரம் பயன்படுத்தாமல் குறித்த விடயத்திற்கான தீர்வு காண்பது முக்கியம் வாய்ந்தது.
குறித்த விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பரபரப்புக்கு சம்மந்தமான அக்கரைப்பற்று பிராந்திய நிர்வாக பொறியாளர் (Executive Engineer) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதுடன் விரைவில் இதனை நிவர்த்தி செய்யக்கூடியதாகவும் அமையும் என்றவாறு பதில்கள் கிடைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த விடயம் நிவர்த்தி செய்யப்படும் வரை அவதானம் தொடரும்…..