ஆலையடிவேம்பு
கோடீஸ்வரன் ஆலையடிவேம்பு இராம திகோ/இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அம்பாறை, ஆலையடிவேம்பு திகோ/இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.