இலங்கை
வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுக்க முற்பட்டமையினால் பதற்றம்: மக்கள் அவதானம்…

மாத்தளை – ரத்தோட்டை பகுதியில் வாக்காளரொருவர், வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுக்க முற்பட்டமையினால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதாக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பிற்காக ரத்தோட்டை சரிபுத்த வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்களிக்க செல்பவர்கள் கையடக்க தொலைபேசி பாவனை, புகைப்படம் எடுத்தல் காணொளி எடுத்தல், ஆயுதங்களை கொண்டுசெல்லல் மற்றும் மது அருந்திவிட்டு செல்லுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.