ஆலையடிவேம்பு ப.நோ.கூ.சங்க எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணை வினியோகம் இன்று முதல் ஆரம்பம்…

வரைவுள்ள ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோக தொகுதி திறப்பு விழா இன்று (08.01.2023) காலை அண்ணளவாக 10.00 மணியளவில் ஆலையடிவேம்பு ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் திரு.நா.ஏரம்பமூர்த்தி அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்குமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும்,கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமாகிய எந்திரி.ந.சிவலிங்கம் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளர் திரு.கே.வி.தங்கவேல்,
மற்றும் விசேட அதிதிகளாக தலமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப்.எம்.ஐ.எம்.பரீட். கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கோ.காந்தரூபன் , ஆலையடிவேம்பு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள், பல.நோ.கூ.சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
குறித்த மண்ணெண்ணை வழங்கும் இயந்திரம் புதிதாக திறந்து வைக்கப்பட்டமை பிரதேச மக்கள் மத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.