திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றல் ஆரம்பித்தல் நிகழ்வு….

2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் பொறுபேற்றல் முதல் நாள் நிகழ்வானது அரசாங்க சுற்று நிருவத்தின் அமைவாக இன்று 2023/01/02 திகதி 09.00 மணியளவில் சகல அரச நிறுவனங்களிலும் ஆரம்பமானது.
அந்த வகையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 2023 ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பித்தல் பொறுப்பேற்றல் நிகழ்வானது திருக்கோவில்
பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (02) காலை இடம்பெற்றது.
இவ் நிகழ்வானது சமய அனுஷ்ட்டானங்களுடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து தேசிய கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், உறுதிமொழி எடுத்தல், இராணுவம் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 2நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் அவர்களை உற்சாகம் ஊட்டும் முகமாக தலைமை உரையும் பிரதேச செயலாளரினால் நிகழ்த்தப்பட்டது.