ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் தீவுக்காலை பகுதில் புதிய பேருந்து தரிப்பிடம் நிர்மாணம்: விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக….


ஆலையடிவேம்பு தீவுக்காலை பிரதேசத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக வழங்கப்பட இருக்கின்றது.
இந்த பேருந்து தரிப்பிடம் ஆனது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சாகாமம் பிரதான வீதி தீவுக்காலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன். பேருந்து தரிப்பிடமானது தீவுக்காலை, கோளாவில், சின்னப்பனங்காடு மற்றும் ஆலையடிவேம்பு மக்கள் பனங்காடு, மகாசக்தி கிராமம், புளியம்பத்தை கிராமம், கண்ணகி கிராமம், கவடாப்பிட்டி மற்றும் அலிக்கம்பை போன்ற பிரதேசங்களுக்கு மக்கள் செல்வதற்கு மிக நீண்டகால தேவையாக இருந்துவந்த நிலையில் மக்கள் நன்மை அடையும் வகையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களின் ஆலோசனையில் பிரதேச சபையினால் PSDG 2022 ஆம் திட்டத்தின் கீழ் அண்ணளவாக எட்டு லட்சம் ரூபா செலவில் பேருந்து தரிப்பிடம் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் தற்போது பயன்படுத்தி வருவதுடன் உத்தியோகபூர்வமாக விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.