ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பண்டிகை நாளில் மழையின் தாக்கம்: வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம்: பாதைசாரிகள் மிக கவனம்!

நாட்டின் பல பகுதிகளில் டிசம்பர் 26 ஆம் திகதி வரை காற்றழுத்த தாழ்வு காரணமாக 150 mmக்கு மேல் மிக கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கைகள் வெளிவந்ததாக இருக்கின்ற நிலையில்.
எமது ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் கடந்த இரண்டு நாட்களாக மழையுடனான வானிலை தொடர்ந்ததாக இருக்கின்ற நிலையில் இன்றைய தினம் (25) மாலை வேளையில் பெய்த கனத்த மழை காரணமாக அக்கரைப்பற்று 7/4 பிரதேச கலாச்சார மண்டப வீதி மற்றும் அதனை அண்டிய ஒருசில வீதிகளில் மழைவெள்ளம் வீதியை சூழ்ந்ததாகவும் ஒருசில வீடுகளுக்குள் நீர் உற்புகுந்ததாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறாக நிலையில் குறித்த வீதிகளில் மழைவெள்ளம் வீதியை முற்றாக சூழ்ந்ததாக காணப்படுவதனால் பாதசாரிகள் மிகவும் அவதானத்துடன் குறித்த வீதிகளில் பயணங்களை மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது.