ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சைக்கு வருகை….

ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது.
அந்த நிலையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு சென்றிருந்தார்கள்.
இன்று இடம்பெறும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியாக 3 இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
குறித்த பரீட்சைக்காக 2 ஆயிரத்து 894 பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என்பதுடன் இதற்கு பதிலாக பரீட்சை மாணவர்களின் வருகை பதிவு ஆவணமொன்றில் கையெழுத்து பெறப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இம்முறை பரீட்சையில் பகுதி இரண்டுக்கான வினாத்தாள் முதலில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.