ஆலையடிவேம்பு
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு மருது விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன் இலவச கருத்தரங்கு….

எதிர்வருகின்ற தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நேற்று (2022.12.14) புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் மருது விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
குறித்த இலவச கருத்தரங்கில் மாணவர்களுக்கு முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்கள் பயிற்சிகளுடன் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு கருத்தரங்கு ஆசிரியர் பிரபாகரன் அவர்களால் சிறப்புற நடாத்தி முடிக்கப்பட்டது.
மேலும் கருத்தரங்கினை மேற்கொண்ட ஆசிரியர் பிரபாகரன் அவர்களுக்கு மருது விளையாட்டு கழகத்தினரினால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.