ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு இன்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேவகிராம பங்குத்தந்தை வாசு அடிகளாரும், விசேட விருந்தினர்களாக கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திரு.யோகராஜா அவர்களும் மற்றும் தேவகிராம உதவி பங்குதந்தையும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் குறித்த ஒளிவிழா நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் பலவும் கோலாகலமாக இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.