ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு புத்தக கண்காட்சியும், நூல் விற்பனை மற்றும் அறநெறிச் சாரம் நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த இல்லத்தில் புத்தக கண்காட்சியும், நூல் விற்பனையும் இடம் பெற்றதோடு அறநெறிச் சாரம் நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இன் நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ய.அநிருத்தனன் அவர்களின் தலைமையில் விபுலானந்தர் அவதரித்த இல்லத்தில் இன்று (11/12/2022) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்தஜீ மகராஜ் திரு முன்னிலை வைத்ததோடு, பிரதம அதிதியாக அப்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே. ஜெகதீஸன் அவர்கள் கலந்து கொண்டார்.
அத்தோடு ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ பத்மலோஜ சிவம் ஐயா,சிவ ஸ்ரீ சுவாஸ்கர சர்மா அவர்களும், வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அவர்களும் காரைதீவு, ஆலையடிவேம்பு, திருக்கோவில் ஆகிய பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்களும், பட்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களின் பிரதி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆலய பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச பொதுமக்கள் ஏன பலரும் கலந்து கொண்டர்.
மேலும் நூல்கள் வெளியீடுகளின் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 11.12.2022 முதல் 14.12.2022 புதன் கிழமை வரை நான்கு நாட்கள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.