ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச கலை இலக்கிய போட்டி – 2022 இல் நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்ற திருமதி.லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி….

கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச கலை இலக்கிய போட்டி – 2022 இல் கவிதை, சிறுவர் கதை, சிறுகதை, பாடலாக்கம் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக்கொண்டமைக்காக திருமதி. லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை கௌரவித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பாபாகரன் அவர்கள் தலமையில் அண்மையில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
திருமதி. லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிரதேச கலை இலக்கிய போட்டியில் சிறுகதை, சிறுவர் கதை, பாடலாக்கம் ஆகிய போட்டிகளில் முதலாம் இடத்தையும் மற்றும் கவிதை போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.