இலங்கை
தம்பிலுவில் பகுதி பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் ஏற்பட்ட விபரிதம்: ஒரு மாணவன் பலி!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் உள்ள
தேசியபாடசாலை கல்வி கற்கும் 08 ஆம் தரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் விளைவாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று (08) நண்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தி உயிரிழந்த மாணவன் தம்பிலுவில் 01 சேர்ந்த 13வயதுடய சிவபாலன் கிஷான் எனத் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சடலமானது உடல் கூற்றுப்பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஜே.கே.யதுர்ஷன்