ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய 10 ,O/L மாணவர்களுக்கு இலவசமாக சிறப்பு குறிப்புக்களின் தொகுப்பு பிரதி செய்து வழங்கப்பட்டது: ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம் பாடசாலையின் தேவைகள்.

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய 10 மற்றும் 11 ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களை O/L பரீட்சைக்கு இற்கு தயார் படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு இலவசமாக வரலாறு பாடத்திற்கான சிறப்பு குறிப்புக்கள் அடங்கிய தொகுப்பு திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து பிரதி செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலை மாணவர்கள் கல்வியில் ஆர்வம் உள்ள சிறந்த மாணவர்களாக இருக்கின்ற போதினும் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் பௌதிக வசதிகளில் பின்தங்கிய வகையான வசதிகளே இவ் பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கின்றது .
இப் பாடசாலையின் பௌதிக ரீதியான பல தேவைப்பாடுகள் எங்கள் அமைப்பினால் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றது.
மேலும் சிறந்த ஆசிரியர்கள் இருக்கின்ற போதிலும் கல்விநிலையில் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் இவர்களுக்கு கிடைக்கப்பெறாமலே இருக்கின்றன.
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலை தொடர்பான பௌதிக ரீதியான, கல்வி ரீதியான பல திட்டங்கள் எங்கள் அமைப்பிடம் (ஆலையடிவேம்புவெப் இணையக்குழு) காணப்படுகின்றன. செயற்படுத்துவதற்கு பொருளாதார சிக்கல்கள் காணப்படுகின்றன.
இப் பாடசாலையின் பழைய மாணவர்கள், தங்களால் இயன்றவற்றை செய்துதருகின்றோம் என எண்ணம் கொண்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் எங்களுடன் தொடர்வுகொள்ளவும்.
மற்றும் நீங்கள் தனியாக செய்ய விரும்பின் அல்லது உங்கள் அமைப்பின் ஊடாக செய்யவிரும்பின் பாடசாலையின் அதிபரை தொடர்வுகொண்டு பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு கைகொடுக்கவாருங்கள்.
நமக்காக நாம் Alayadivembuweb.lk
தொடர்வுகளுக்கு – 0771925225 (ஆலையடிவேம்புவெப் இணையக்குழு)