திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களில் காணி ஆவணப்பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி ஆவணப்பத்திரம் வழங்கும் நிகழ்வு……

திருக்கோவில் பிரதேசத்தில் காணி ஆவணங்கள் பெற்றுக் கொள்ளாத மக்களுக்கான காணி ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண காணி நிருவாக திணைக்களத்தின் மாகாணக் காணி ஆணையாளர் திரு. DMRC.தசநாயக அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு 362 பயனாளிகளுக்கு காணி ஆவணங்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் கிழக்கு மாகாண பிரதேச செயலகங்களில் அதி கூடிய காணி ஆவணங்களை தாயாரித்த பிரதேச செயலகமாக திருக்கோவில் பிரதேச செயலகம் இருந்ததாக கிழக்கு மாகாண காணி ஆணையாளரால் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவ்வாறான மிகச்சிறந்த அடைவினை பெற்றுக் கொண்டமைக்காக பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் , காணி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட காணிப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மாகாண காணி நிருவாக திணைக்களத்தினால் மெச்சுரைக்கான பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இதற்கான முன்னிண்டு உழைத்த கிராம சேவை உத்தியோத்தர்களும் பாராட்டப்பட்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண காணி நிருவாக திணைக்களத்தின் உதவிக் காணி ஆணையாளர் திரு. க.ரவிராஜன், திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு. க.சதிசேகரன், காணி நிருவாக திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட தலைமை காணி உத்தியோகத்தர் ஜனாப் MLM.முஸம்மில் நிருவாக உத்தியோத்தர் m.மோகனராஜா,கிராமசேவையாளர்களின்நிறுவாக உத்தியோத்தர் திரு.கந்தசாமி, நிறுவாகபிரிவில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோத்தர் திரு.A.சசிந்திரன் காணிபிரிவு .திரு.கோவிந்தசாமி ஆகியோரும் காணிபிரிவு உத்தியோத்தர்கள் உட்பட திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ்வாறன அடைவுமட்டதுக்கு கொண்டு சென்ற அனைத்து தரப்பினர்களுக்கும் பிரதேச செயலாளர் நன்றிகளை தெரிவித்தார்.
யதுர்ஷன்.திருக்கோவில்.