2019 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற சைவசமய பரீட்சை

அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் இன்று (02.11.2019) சனிக்கிழமை தரம் 3ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையான வகுப்பு மாணவர்களுக்கு சைவசமய பரீட்சை இந்து மாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம்(ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் தலைமையின் இந்து மாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன்(விரிவுரையாளர்) மற்றும் இந்து மாமன்ற உறுப்பினர்கள் பங்களிப்புடனும் வலய கல்வி அதிகாரிகளின் அனுமதியுடனும் மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் 30 இற்கு அதிகமான பாடசாலைகளில் 6,000 இற்கு அதிகமான மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர் மேலும் இப் பரீட்சை முடிவுகள் (04) சித்திரை மாதம் அறிவிக்கப்பட்டு (05) வைகாசி மாதம் இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.