சர்வதேச யோகா தினத்தினை நினைவு கூறும் முகமாக அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் யோகா நிகழ்வு……

சர்வதேச யோகா தினத்தினை நினைவு கூறும் முகமாக நேற்றய தினம் (26/06/2022) காலை 6.30 மணியளவில் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் யோகா நிகழ்வு மா.கிருபைராஜா தலைமையில் இடம்பெற்றது.
மேலும் ஆரம்ப நிகழ்வாக கொடியேற்றத்தினை தொடர்ந்து யோகாசன பயிற்றுவிப்பாளர்களான காந்தன் மற்றும் க. வரதன் ஆகியோரினால் பயிற்றுவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அமுர்த வசனம், சுபாஷிதம், தனிப்பாடலைத் தொடர்ந்து சிறப்புறை ஆலையடி வேம்பு இந்து ஸ்வயம் சேவக சங்க உறுப்பினர் ஆறுமுகம் சசிந்திரன் அவர்களினால் இடம்பெற்றது.
இன் நிகழ்வுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி. சர்மிளா அவர்களும், அக்கரைப்பற்று இந்து ஸ்வயம் சேவக சங்க இணைப்பாளர் க.சரவணபவன் அவர்களும் ஆலையடி வேம்பு இந்துமாமன்ற தலைவர்,ஆலையடிவேம்பு ஆலயங்களின் உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.