ஆட்ட நிர்ணய சதி குறித்து தகவல் வழங்க தவறினார் சஹீப் அல் ஹசன்- தடையை எதிர்கொள்கின்றார்

பங்களாதேஸ் அணியின் சிரேஸ்ட வீரர் சகீப் அல் ஹசன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் குறித்து அறிவிக்காதமைக்காக அவரிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அணிக்கான பயிற்சியில் சகீப் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசியின் உத்தரவின் பேரிலேயே சஹீப் அல் ஹசன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு பங்களாதேஸ் கிரிக்கெட் நிர்வாகம் தடை விதித்துள்ளது என பங்களாதேசின் நாளேடு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாகவே அவர் பயிற்சிகளில் ஈடுபடவில்லை அணியின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என அந்த நாளேடு தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களிற்கு முன்னர் சர்வதேச போட்டியொன்றின் போது ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட ஒருவர் சஹீப்பிற்கு பணம் வழங்க முன்வந்தார் இதனை சஹீப் நிர்வாகத்தினரிற்கு தெரியப்படுத்தவில்லை என அந்த நாளேடு தெரிவித்துள்ளது.
இதனை அவர் சமீபத்தில் ஐசிசியின் ஊழல் விசாரணை பிரிவினரிற்கு வழங்கிய வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்த நாளேடு தெரிவித்துள்ளது.