ஆலையடிவேம்பு
அருள்மிகு கோளாவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி திருச்சடங்கு பெருவிழாவின் நான்காம் நாள் சடங்குப் பூசையும் ஊர்சுற்று காவியம் பாடலும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது….

கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு சனிக்கிழமை (04.06.2022) திருக்கதவு திறத்தல் சடங்குடன் ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.06.2022) திருக்குளிர்த்தி நிகழ்வும் இடம்பெற உள்ளது.
அந்தவகையில் நேற்றய தினம் (08.06.2022) கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கின் நான்காம் நாள் சடங்குப் பூசையும் ஊர்சுற்று காவியம் பாடலும் மிகச் சிறப்பாக பெரும் திரளான பக்தர்கள் வருகையுடன் நடைபெற்றது.
இவ் திருச்சடங்கு பூசை நிகழ்வுகள் ஆலய காப்புகானர் சக்தி புஜா உபாசகர். சிவத்திரு. த. பூபாலபிள்ளை மற்றும் சிவத்திரு. த. பாலேந்திரன் அவர்களினாலும் ஆலய நிர்வாகத்தினர் தலைமையிலும் இடம்பெற்று வருகின்றது.