அக்கரைப்பற்று பவர் விளையாட்டு கழகம் நடாத்திய ”பவர் சம்பியன் கிண்ணம் 2022” 32 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகம் 2ம் இடம்….

அக்கரைப்பற்று பவர் விளையாட்டு கழகத்தின் ”பவர் சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 11 பேர் 08 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக 32 கழகங்கள் பங்குபற்றலுடன் விலகல் முறையில் (Knockout) போட்டிகள் கோலாகலமாக அக்கரைப்பற்று பவர் விளையாட்டு கலகத்தினரினால் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது.
”பவர் சம்பியன் கிண்ணம் 2022” கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகத்தை எதிர்த்து அட்டாளைச்சேனை எவர்டொப் கழகம் துடுப்பெடுத்தாடி அட்டாளைச்சேனை எவர்டொப் கழகம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றது 32 கழகங்கள் பங்குபற்றிய தொடரில் 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.
இவ் கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகமானது காலிறுதியில் தம்பிலுவில் எதிரொலி கழகத்தையும் அரையிறுதியில் திருக்கோவில் உதயசூரியன் கழகத்தையும் வெற்றி கொண்டு இறுதி ஆட்டத்தில் துரதிஸ்டவசமாக அட்டாளைச்சேனை எவர்டொப் கழகத்திடம் தோல்வி அடைந்து 32 கழகங்கள் பங்கு பற்றிய இத் தொடரில் 2ம் இடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.