கவிதைக்களம்
என் தாயே…

சுமையாய் வந்த என்னை சுகமாய் ஏற்ற தாயே!
உன்னை உருக்கி என்னை வடித்த சிற்பி நீயே!
ஆயிரம் முத்தங்கள் இட்டு, என்னை அரங்கேற்றம் செய்தாய்!
எனக்காக மட்டும் வாழும் என் அன்பு தாயே,
இனி எத்தனை பிறவி எடுத்தாலும் என் அன்னை நீயே!