இலங்கை
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம், ஒருநாள் சேவை இடம்பெறாது

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான கடவுச்சீட்டு விநியோகம், சாதாரண சேவையின் கீழ் நாளை மறுதினம்(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பம், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.