இலங்கை
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌிவந்த உண்மை

இலங்கை எதிர்நோக்கும் எரிபொருள் நெருக்கடியைத் தணிக்க சீனா 2021 ஜூலை முதல் 2022 ஜனவரி வரை இலங்கைக்கு எரிபொருளை வழங்கி வருவதாக இன்று (25) தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை முதல் 2022 ஜனவரி வரை, இலங்கை சீனாவிடம் இருந்து 730,000 மெட்ரிக் தொன் எரிபொருளைக் கொள்முதல் செய்துள்ளது.
அதில் இதுவரை 7 பங்குகளுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பங்குகளுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொண்டமைக்கு இலங்கை 390 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.