ஜேர்மன் விட்டல சாய் பாபா ஆலயத்தினால் மலையக மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு …

தற்போது நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மலையகத்தில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஜேர்மன் விட்டல சாய் பாபா ஆலயத்தினால் பதுளை மாவட்டத்தில் உள்ள பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இனிகம்பெத்த தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 65 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கிராம சேவகர் திருமதி சிவமலர் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மாந்தோட்ட மாரியம்மன் கோயில் தலைவர், பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இவ் நிவாரணத்தை வழங்கி வைத்தனர். இதற்கு தவலிங்கம் பாலினி, ராஜன் மதி, நகுலேந்திரன் சிவானந்தி, மணிவண்னன் ராஜு, பிரகாஷ் இந்து , ராசன் மாலினி ஆகியோர் இணைந்து நிதியனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.