அறிவொளி வளையத்தினால் மலையக பெண்கள் தலைமை தாங்கும் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு….

தற்போது நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மலையகத்தில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 68-E யஹலேவெல தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கிராம சேவகர் செல்வி.எஸ்.சுகந்தினி அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், யகலேவெல பிள்ளையார் கோயில் தலைவர், பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இவ் நிவாரணத்தை வழங்கி வைத்தனர்.
இதனை New Sun Star Youth Club ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு யோகாக் கலையை உணர்த்த, பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சேவையே “அறிவொளி வளையம்” என்பது குறிப்பிடத்தக்கது.