ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ATM இயந்திரத்தொகுதி திறப்பு விழா….

ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கமைவாக மக்கள் வங்கி ATM இயந்திரத்தொகுதி திறப்பு விழா இன்று (01.04.2022) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் உயர் அதிகாரிகள், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த. கிறோஜாதரன், P.H.கிரு மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த ATM இயந்திரம் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பலர் பல முயற்சிகள் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.